கந்தரோடை
யாழ்ப்பாண மண்ணில் திராவிடர்களின் ஆரம்பகாலக் குடியிருப்புகளில் ஒன்றாகக் கந்தரோடை இனங்காணப்பட்டுள்ளது. இறந்தவர்களைப் பெரும் கற்கள் கொண்டு அடக்கம் செய்த ஒரு காலகட்டம் பெருங்கற்காலம் என்று திராவிடர் வரலாற்றில் அழைக்கப்படுகின்றது. இக்காலம் விஜயன் வருகைக்கு முற்பட்ட காலமாகும். இப்பெருங்கற்காலக் குடியிருப்புகள் யாழ்குடநாட்டில் சுமார் 40 இடங்களிலிருந்ததாகத் தொல்லியல் ஆய்வாளர்களால் இனங்காணப்பட்டுள்ளன. அவற்றில் தலையாய ஒன்றாகக் கந்தரோடை குறிப்பிடப்படுகின்றது.
சுமார் 3.2 சதுர கிலோமீற்றர் பிரதேசத்தை உள்ளடக்கிய இப் பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்ட போது தொன்மையான கறுப்புச் சிவப்பு மட்பாண்டங்கள், நாணயங்கள்,எலும்புகள், கட்டட அழிபாடுகள், சிற்பங்கள் , சிலைகள், தமிழ் பிராமிப் பொறிப்புகள், மணி வகைகள், ஆபரணங்கள் முதலானவை கிடைக்கப் பெற்றன. இவை இப்பிரதேசத்தின் தொன்மையை உணர்த்தி நிற்கின்றன. இச் சான்றுகள் இந்தியாவினது அரிக்கமேடு , ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களுடனான தொடர்புகளை உணர்த்துகின்றன. கிரேக்க உரோமப் பொருட்கள் , நாணயங்கள் அந் நாடுகளுடனான நேரடி அல்லது தமிழகம் மூலமான தொடர்பு இருந்ததை உறுதி செய்கின்றன.
kantharodai
kantharodai
யாழ் குடாநாட்டில் முதன்முதலாக தொல்லியல் ஆய்வுகளை போல்.ஈ.பீரிஸ் என்பவரால் 1917 இன் முற்பகுதியில் கந்தரோடையில் ஆரம்பித்து இப் பிரதேசத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினார். புpன்னர் 1967 தொல்லியல் திணைக்களத்தால் மேலாய்வுகள் , அகழ்வாய்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. கந்தரோடையில் பீரிஸினால் தெரிவு செய்யப்பட்ட கிழக்குத் திசையிலுள்ள மையத்தில் முதல் ஆய்வு ஆரம்பமாகியது. அதன் பின்னர் 1967ல் விமலா பேக்லே என்பவரால் இதேயிடத்தில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. யாழ் குடாநாட்டில் புராதன நகர மையமாகவும் குடியேற்றமாகவும் கந்தரோடை விளங்கியதென்பதற்கான சான்றுகள் இத்தொல்லியல் ஆய்வுகளினூடாக வெளிப்படுத்தப்பட்டன. யாழ் குடாநாடடில் பெருங்கற்கால பண்பாடு நிலவிய முக்கிய பிரதேசமாகவும் அனுராதபுரம் மகாகமவிற்குச் சமகால நகரமயமாக்கத்தைக் கொண்ட பிரதேசமாகவும் கந்தரோடை விளங்கியதென்பதற்கு இவ்வாய்வுகளே சான்றாதாரங்களாகும்.
1967-1970 களில் அமெரிக்;கரான பென்சில் வேனியப் பல்கலைக்கழக ஆய்வாளர் இங்கு மேற்கொண்ட அகழ்வாராச்சியில் கி.மு1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையானது இது எனக் குறிப்பிட்டுள்ளார்.அநுராதபுரம், பொலனறுவை, திசமாறகம ,மாதோட்டம் போன்ற இடங்களுடனும் தொடர்புகள் இருந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கந்தரோடை பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் இலங்கையின் புராதன நூல்களான தீபவம்ச மகாவம்ச போன்றவற்றில் காணப்படாவிட்டாலும் கி.பி14 ஆம் நூற்றாண்டுக்குரிய ரம்பொத்த என்ற நூலில் கதிரகொட எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கதிறுகொடவைப் பௌத்த மதத்திற்குரிய மையமாகவே ரம்பொத்த நூல் குறிப்பிடுகின்றது. எனினும் சிங்கள மக்களால் மட்டுமே இப் பௌத்த மதம் உள்வாங்கப்பட்டது என்பதனை விடச் சமகாலத்திலே தமிழர்களும் பௌத்த மதத்தினைக் கடைப்பிடித்து வந்தமையைத் தமிழகத்திலும் அவதானிக்க முடிகிறது. இங்கு கிடைத்த சான்றுகளும் தமிழ்ப் பௌத்தர்கள் இங்கு வாழ்ந்திருந்தனர் என்பதை வெளிப்படுத்துவதாக தெரிகின்றது. இங்கு கிடைத்த தொல்பொருட்கள் பலவும் தமிழகத்தில் பெருங்கற்கால மற்றும் பௌத்த சின்னங்கள் காணப்பட்ட இடங்களது சின்னங்களை ஒத்தவையாக உள்ளன. இப் பெருங்கற்காலப் பண்பாட்டு வழிவந்த மக்கள் தமிழ் மற்றும் பிராகிருத மொழிகளைப் பேசினர் என்பதனை இங்கு கிடைத்த மட்பாண்டச்சாசனங்கள் உறுதிசெய்கின்றன.
kantharodai vegarai
kantharodai vegarai
3000 ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்த திராவிட மக்கள் நிலையான குடியிருப்புக்கள் ,நிரந்தரபொருளாதாரம் , பண்டமாற்றுவர்த்தகம் , நகரமயமாக்கம் என்பவற்றை கொண்டு வாழ்ந்த சான்றாதாரங்கள் கிடைக்கப்படுகின்றன. இவர்களது வழி வந்தவர்களாலேயே பௌத்த மதம் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும். பௌத்தக் கலை மரபுகள் வளர்த்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழர்கள் பௌத்தர்களாக இருந்தனர் என்பதை இங்கு கிடைத்த தகபத-குண , குணி முதலான தமிழ் பிராமிச் சாசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. இவ் வகையில் இன்று பௌத்த மதத்திற்குரிய ஸ்தூபிகளுடன் காட்சி தருகின்றமையானது இலங்கைத் தமிழர்களது வரலாற்றில் முக்கிய பங்கினை வகிக்கின்றது எனலாம்.
kantharodai vedio
kantharodai vedio
உசாத்துணை நூல்கள்
1) சிற்றம்பலம்.சி.க.,1993,யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு , யாழ் பல்கலைக்கழக வெளியீடு , பக்.64-69.
2) கிருஸ்ணராசா.செ.,1999,இலங்கைவரலாறு.பாகம்-01 , வரலாற்று துறை யாழ்ப்பாண பல்கலைக்கழகம் , பக். 71-72.
3) கிருஸ்ணராசா.செ., 2010,இலங்கை பண்பாட்டு பரிணாமத்தின் அடிப்படைகள் , ஏவி கிறியேற்றர் , யாழ்ப்பாணம், பக். 123-124.



Jammy Monkey slot machine - JTM Hub
ReplyDeleteJammy Monkey slot 원주 출장마사지 machine. Get best 서산 출장안마 deals on Jammy Monkey 태백 출장샵 slot machine, online 충청북도 출장안마 from JTM Hub. 수원 출장안마 ✓ 30% off with promo code JTMBET!