யாழ்ப்பாணத்தில் அரச மரபு தோண்றி வளர்ந்த வரலாற்றைக் கலைவடிவமாக கூறும் நகுலேஸ்வரர் ஆலயம்


  
உலக மரபுரிமைச் சின்னங்களின் வரிசையில் இணைத்துக் கொள்ள இலங்கை கலாசார அமைச்சினால் கருத்தில் கொள்ளப்பட்ட புராதன ஆலயங்களில் ஒன்றாக கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம் காணப்படுகின்றது. இதற்கு இவ்வாலயம் அமைந்த இடத்தின் வரலாறும்  ஆலயத்தின் தோற்றமுமே காரணமாகும். இவ்வாலயமானது பண்டு தொட்டு சர்வதேச கடல்சார் வலையமைப்பில் அரசியல்  வாணிப கலாசார உறவுகளின் மையமாக இருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது.

போல் பீரிஸ் என்ற அறிஞர் கி.மு 6 ஆம் நூற்றாண்டு விஜயன் இலங்கை வந்த போது வடக்கில் இருந்த ஆலயங்களில் ஒன்றாக நகுலேஸ்வரத்தைக் குறிப்பிடுகிறார். விஜயன் வருகை இன்று ஒரு கட்டுக்கதையாகப் பார்க்கப்பட்டாலும் அவன் வருகை தொடர்பான காலத்துடன் இவ்வாவலயம் இனணத்துக் கூறப்பட்டிருப்பது ஆலயத்தின் பழமைக்கு ஒரு சான்றாகும். அவற்றை உறுதிப்படுத்தும் சான்றுகள் ஆலயம் அமைந்த பிராந்தியத்திற்கு உண்டு என்பதை நாம் இவ்விடத்தில் முதலில் குறிப்பிடவேண்டியுள்ளது.
keeri malai

இலங்கை வரலாற்று இலக்கியங்களில் கி.மு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து இலங்கையில் இருந்த 3 துறைமுகங்களை பட்டினம் என அழைக்கின்றனர். அவை முறையே யாழ்ப்பாணம;;;; கோணகாமக பட்டன மகாதொட்டபட்டன என்பனவாகும். அவற்றுள் இது வலிகாமத்தில் அமைந்திருந்த துறைமுகமாகவிருக்கலாம் என்பதை சோழக்கல்வெட்டில் வரும் வலிகாமம் என்ற பெயரும் சூளவம்சத்தில் வரும் வலிகாமம் என்ற பெயரும் உறுதிசெய்கின்றன. இவ் வரலாற்றுப்பின்னணிதான் கதிரமலையைத் தலைநகராகக் கொண்ட அரசு கி.பி8ஆம் நூற்றாண்டில் தோன்றக் காரணமாகும். இந்த அரசியல் ஆட்சி புரிந்த உக்கிரசிங்கன் மாருதப்புரவல்லி கதையுடன் இணைந்ததுதான் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தின் தோற்ற வரலாறாகும்.

இன்று நகுலேஸ்வரர் ஆலயத்தை தரிசிக்க செல்லும் ஒருவருக்கு ஆலயத்தின் அமைப்பு கர்ப்பகிருகம் அந்தரளம் முன் மண்டபம் துணைக்கோவில்கள் விமானம் கோபுரம் செப்பு திருமேனிகளும் திராவிடக்கட்டட கலை மரபில் வடிவமைக்கப்பட்ட சிலைகளும் புடைப்புச் சிற்பங்களும் பிரமிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் அவை பெரும்பாலும் தற்காலத்திற்குரிய கலைவடிவங்களாகும். இருப்பினும் ஆலயத்திற்கு தெற்காக உள்ள மண்டபத்திலும் தீர்த்தக் குளத்தைச் சுற்றிலும் அமைந்துள்ள சிற்பங்கள் ஆலயத்தின் வரலாற்றிற்கும் அதன் தோற்றத்திற்கும் உயிர் கொடுப்பனவாக உள்ளன.

keerimalai hot water

 இற்றைக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த வரலாற்று நிகழ்வுக்கு உயிர் கொடுக்கும் வகையில் அங்குள்ள சிற்பங்கள் மாருதப்புரவல்லி குதிரை முகத்துடன் இருந்த காட்சி முனிவரிடம் வரம் பெற்ற காட்சி குதிரைமுகம் நீக்கிய மாருதப்புரவல்லியின் தோற்றம் ஆட்சி அரியணையில் அவர் வீற்றிருக்கும் காட்சி என்பன ஆலயத்தின் வரலாற்று மரபுரிமையை நினைவு படுத்துவனவாக உள்ளது. பொதுவாகப் பழமையான ஆலயங்கள் ஒவ்வொன்றிற்கும் சில ஜதீகங்கள் உண்டு. அதிலும் சில உண்மைகள் இருக்கலாம். வுரலாற்றில் உண்மைகளைவிட ஜதீகங்களே பல நாட்டு வரலாற்றில் செல்வாக்குச் செலுத்துகிறது. கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தோற்றத்திற்குள்ள கதையை ஜதீகமாகப் பார்த்தாலும் அது அமைந்துள்ள இடத்தின் பழமை பற்றிக் கூறும் நம்பகரமான தொல்லியல் சான்றுகள் ஆலயம் பற்றிய கதையை வரலற்று உண்மையில் இருந்து ஒதுக்கிவிட முடியாது என்பதற்கு கட்டியம் கூறுவதாக உள்ளது.
 அதனால்தான் ஆரியச்சக்கரவர்த்திகால வரலாற்றிலும் போர்த்துக்கேயர்கால வரலாற்றிலும் இவ்வாலயம் நினைவுபடுத்தக காரணமாகும். யுhழ்ப்பாணத்தில் நல்லுரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தில் நகுலேச்சரம் அரச ஆதரவு பெற்ற தலமாக விளங்கியதோடு அவர்கள் தீர்த்தமாடி சிவாலய தரிசனம் செய்து பயனடைந்தமை பற்றி யாழ்ப்பாணவைபவமாலை கூறுகின்றது.


எனவே இன்று ஆலயம் அமைந்துள்ள கீரிமலைப்பிரதேசத்திற்கு செல்லும் ஒருவருக்கு ஆலயம் அமைந்த இடம் சுற்றாடலில் காணப்படும் குடியிருப்புக்களின் எச்சங்கள்இ சுற்றிவரவுள்ள ஆலயங்கள்இ ஐரோப்பியர் காலக்கட்டடங்கள்இ கடற்பாதுகாப்பு அரண்கள்இ வெளிச்சவீடுகள்இ கடற்கரை சூழல் என்பன குடாநாட்டின்  தொடக்ககால தொல்லியல் மையத்திற்குச் சென்று வருகின்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. 








உசாத்துணை நூல்கள்

1) கந்தசாமி.வ. (2010)  நகுலேஸ்வர ஆலய வரலாறு  ஆலய பரிபாலன சபை பக்.03-14.

2) சோக்கலிங்கம்.த. (2014) வடஇலங்கை ஆலய வரலாறு  இந்து கலாசார திணைக்களம்  பக்.54-68.

Comments

Popular posts from this blog

அனுராதபுர கால சந்திரவட்டக்கல் சிற்பக்கலை மரபு

கந்தரோடை

ஜமுனா ஏரி