அனுராதபுர கால சந்திரவட்டக்கல் சிற்பக்கலை மரபு
இலங்கையின் கலை வரலாற்றில் சுதேச பாரம்பரியங்களும் விழுமியங்களும் முற்றுமுழுதாக பிரதிபலிக்கும் நிலையில் வளர்த்தெடுக்கப்பட்ட சிற்பக் கலை கூறுகளில் சிறப்பாக குறிப்பிடத்தக்கது சந்திரவட்டக்கல் கலை மரபாகும். இம் மரபு கிருஸ்ணாநதியின் முகத்துவாரத்திலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாகும். கி.மு 3ஆம் நூற்றாண்டிலிருந்து இக் கலை மரபு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது சிங்களத்தில் சந்டடை பதும எனவும் சூரிய சந்திரக் கல்இதாமரை வெட்டுக்கல் போண்ற பல பெயர்களால் குறிப்பிடப்படுகின்றது. இலங்கையில் இக் கலை மரபானது ஆரம்பத்தில் தேரவாத பௌத்த சமய கோட்பாடுகளை கொண்டதாக உருவாக்கப்பட்டு பின் மகாஞான பௌத்த மதத்திற்குரிய தத்துவ கோட்பாடுகளை வெளிப்படுத்தும் கலை ஊடகமாக வளர்த்தெடுத்து செல்லப்பட்டது. moon stone இலங்கையில் சந்திர வட்டக்கல் மரபின் வளர்ச்சி வரலாற்றில் அதன் முதலாவது கட்டத்தினை குறித்து நிற்பது மிகிந்தலை சந்திர வட்டக்கல்லும் கந்தரோடை சந்திர வட்டக்கல்லுமாகும். மிகிந்தலை சந்திர வட்டக்கல்லானது கி.மு 3ஆம் நூற்றாண்டை சார்ந்ததாகவும் எவ்வித செதுக்கல் வேலைப்பாடுகளின்றி வ...