யாழ்ப்பாணத்து மரபுரிமைச் சின்னங்களின் பாதுகாப்பு
ஒரு சமுதாயத்தின் மரபுரிமைச் சொத்து என்பது அதனுடைய வரலாற்றை உண்மையாக உணரக்கூடிய ஒரு வழிமுறையாகும். பாரம்பரியம் என்பது ஒரு தேசத்தின் கலாசார ஒற்றுமைத் தன்மையின் ஒருங்கிணைந்த ஒரு அம்சமாகும். அதேவேளை தற்காலஇஎதிர்கால சந்ததியினரின் நன்மைக்காக கலாசாரத் தொடர்ச்சியின் தொடர்ச்சிகளை வளர்ப்பதற்கும்,பேணிப்பாதுகாப்பதற்குமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
யாழ்ப்பாணக்குடாநாடானது பல தரப்பட்ட கலாசாரக் கூறுகளையும் பிரதிபலிக்கின்றது.குறிப்பாக பல இனம்;இமதம்.மொழி.பாரம்பரியம் கலந்த வாழ்விடமாகவுள்ளது.
யாழ்ப்பாணக்குடாநாடானது பல தரப்பட்ட கலாசாரக் கூறுகளையும் பிரதிபலிக்கின்றது.குறிப்பாக பல இனம்;இமதம்.மொழி.பாரம்பரியம் கலந்த வாழ்விடமாகவுள்ளது.
பாரம்பரியமான இன மத ஒருமைப்பாட்டின் மையமாகவும் அதேவேளை அவற்றினை இன்றுவரை பேணி வருகின்றது. மேலும் வடகிழக்கு பிரதேசங்களின் பொருளாதார மையமாகவும் திகழ்கின்றது.இங்கு காணப்படுகின்ற தொல்லியல் சின்னங்களின் பராமரிப்பு புனர்நிர்மாணமானது உல்லாசத்துறையினை வளப்படுத்துவதுடன் பொருளாதார வளர்ச்சியினையும் மேம்படுத்துகின்றது. இப்பிரதேசத்தில் செங்கற்கள் மரத்தினாலான பலதரப்பட்ட தொல்லியல் சின்னங்கள் காணப்படுகின்றன. இவ் எச்சங்களைப் பேணிப்பாதுகாப்பதற்கான வழிமுறைகளை பற்றி நோக்குவோம்.
செங்கட்டி ,கட்டட புனர்நிர்மாண நடைமுறைகள்
1.புராதன காலத்தில் செங்கட்டிகளால் அமைக்கப்பட்ட வரலாற்றுச்சின்னங்கள் ஒவ்வொன்றையும் பழமைமாறாத வகையில் புனர்நிர்மாணம் செய்தல்.
2 முற்றாக அழிவடையாத ஒவ்வொரு பகுதிச்சுவர்களையும் பாதுகாப்பதுடன்இசிதைவுக்குள்ளான பகுதிகளின் பாதுகாப்பான மேற்படையான 3 தொடர் வரிகளில் செங்கட்டிகளால் சேர்த்துக் கட்டுதல் வேண்டும். புதிய செங்கட்டி வரிசைகள் 1ஃ4 அங்குல தடிப்பில் வைத்துக்கட்ட வேண்டும். இப்புதிய செங்கட்டி வரிகள் பழையதிலிருந்து வேறுபடுத்திக் காட்டப்படல் வேண்டும்.
3செங்கட்டிக் கட்டடங்கள் போதுமான அளவு மரம் தீராந்திகளினால் முட்டுக்கொடுக்கப்பட்ட பின் வேலைகள் ஆரம்பிக்கப்படல் வேண்டும்.
4. பிரித்தெடுக்கப்படும் செங்கட்டிகள் சரியான ஒழுங்கில் இலக்கம் இடப்பட வேண்டும்.
5. பழமையான சுவர்களின் செங்கட்டிகள் சேதமடைந்து இருக்கும் பட்சத்தில் செங்கட்டிச் சுவர்களின் பகுதிகள் மீள அமைக்கப்படுகின்றன. பழைய முகப்பிலிருந்து 4 அங்குலத்திற்கு புதிய செங்கட்டிகள் மீள வைக்கப்படுகின்றன. இவ்வாறாக மீளமைக்கப்பட்ட பகுதி பழமையானதாகவும் அழகானதாகவும் காணப்படுகின்றன.பழமையான மரத்தினாலான கட்டடங்களை பாதுகாப்பதற்கும் புனர்நிர்மானம் செய்வதற்கான வேலைத்திட்டம்.
பொதுவான விடயங்கள்
கலைகளின் அழகு வரலாற்று விழுமியங்கள் மற்றும் கலாசாரச் சொத்துக்களின் பாரம்பரியங்கள் மாறாத வகையில் பௌதிக சீரிய நிலையில் ஆளப்படல் வேண்டும். இன்றைய கட்டட தொழில்நுட்பத்தை விடுத்து பாரம்பரியமாக பின்பற்றப்பட்ட தொழில்நுட்பத்தை விடுத்து பாரம்பரியமாக பின்பற்றப்பட்ட தொழில்நுட்பத்திற்கு அமைவாக கட்டடங்கள் அமைக்கப்படல் வேண்டும்
ஆவணப்படுத்தல்.
பழமையான கட்டடகலை எச்சங்களைப் பாதுகாத்து ஆவணப்படுவதற்கு வெனிஸ் உடன்படுக்கையின் 16ஆம் சரத்திற்கு அமைய இடம்பெறல் வேண்டும்.
கல்வி மற்றும் பயிற்சி
தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பயிற்சி பட்டறைகள் நடத்தப்படல் வேண்டும். இதில் கட்டடகலைஞர்கள் அரும்பொருட்காவலர்கள் தொல்லியல் வல்லுனர்கள் கைவினைக் கலைஞர்கள் உட்பட பாதுகாப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உட்பட எல்லாத் தொழில்வல்லுனர்களும் உள்ளடக்கப்பட வேண்டும்.
பராமரிப்பு.
வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க கட்டடங்கள் பொருட்கள் தொல்பொருட்கள் என்பவற்றைப் பாதுகாப்பதற்கான பராமரிப்பு மிகவும் அவசியமாகும்
தலையீடுகள்.
வரலாற்றுப் புகழ்மிக்க மரத்தினாலான கட்டடங்களை மீள்புனரமைப்புச் செய்யும் போது அதற்காக பயன்படுத்தப்படும் ஏனைய பொருட்களை அத்தொல்பொருட் சின்னத்தின் பழமை மாறாத வகையில் திருத்தியமைத்தல் வேண்டும். கட்டட நிர்மானங்கள் கூரை மேல்வர்ணம் அலங்காரப் பொருட்கள் தளத்திற்குரிய ழூலப்பொருட்கள் என்பன அக் காலநிலைக்கேற்ப தெரிவு செய்யப்படுகின்றது. மீள்நிர்மான வேலைகள் நடைபெறும் போது பாதிப்பு ஏற்படாத வகையில் புனர்நிர்மானம் மேற்கொள்ள வேண்டும்.

எனவே இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் ழூலமாக தற்போது கண்டுபிடிக்கப்படும் பொருட்கள் இயலுமானவரை பாதுகாத்தல் வேண்டும். வரலாற்றுப் புகழ்மிக்க கட்டடங்களில் எதுவித மாற்றங்களும் மேற்கொள்ளக்கூடாது. வேனிஸ் சாசனத்தின் 11ஆம் இலக்க சாசனத்தின் பிரகாரம் எல்லா வேலைகளும் மேற்கொள்ளல் வேண்டும். கட்டட பாகங்கள் அகற்றப்படும் போது அதனுடைய மாதிரிகள் பத்திரப்படுத்தி ஆவணப்படுத்தல் வேண்டும். இவ்வாறாக யாழ்ப்பாணத்து மரபுரிமைச் சின்னங்களின் பாதுகாப்பு முறைகள் அமைவு பெறுகின்றன.
உசாத்துணை நூல்கள்
- Gumerman.G.J., Conservation Archeology, A guide to the cultural resource managemet studie.
- David.G., 2001, Natural Heritage , oxford university , pg.75-78.

Play Slots for Real Money with No Deposit Bonus Codes 2021
ReplyDeleteSlots for Real Money · Jackpot 사카마치 미루 Cleopatra 바카라 검증 사이트 · Sweet Bonanza · Jackpot 6000 · Gonzo's 더굿 토토 Quest · 총판모집 Golden Axe · nextbet Gonzo's Quest.