Posts

Showing posts from June, 2017

அனுராதபுர கால சந்திரவட்டக்கல் சிற்பக்கலை மரபு

Image
இலங்கையின் கலை வரலாற்றில் சுதேச பாரம்பரியங்களும் விழுமியங்களும் முற்றுமுழுதாக பிரதிபலிக்கும் நிலையில் வளர்த்தெடுக்கப்பட்ட சிற்பக் கலை கூறுகளில் சிறப்பாக குறிப்பிடத்தக்கது சந்திரவட்டக்கல் கலை மரபாகும். இம் மரபு கிருஸ்ணாநதியின் முகத்துவாரத்திலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாகும். கி.மு 3ஆம் நூற்றாண்டிலிருந்து இக் கலை மரபு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது சிங்களத்தில் சந்டடை பதும எனவும் சூரிய சந்திரக் கல்இதாமரை வெட்டுக்கல் போண்ற பல பெயர்களால் குறிப்பிடப்படுகின்றது.  இலங்கையில் இக் கலை மரபானது ஆரம்பத்தில் தேரவாத பௌத்த சமய கோட்பாடுகளை கொண்டதாக உருவாக்கப்பட்டு பின் மகாஞான பௌத்த மதத்திற்குரிய தத்துவ கோட்பாடுகளை வெளிப்படுத்தும் கலை ஊடகமாக வளர்த்தெடுத்து செல்லப்பட்டது. moon stone இலங்கையில் சந்திர வட்டக்கல் மரபின் வளர்ச்சி வரலாற்றில் அதன் முதலாவது கட்டத்தினை குறித்து நிற்பது மிகிந்தலை சந்திர வட்டக்கல்லும் கந்தரோடை சந்திர வட்டக்கல்லுமாகும். மிகிந்தலை சந்திர வட்டக்கல்லானது கி.மு 3ஆம் நூற்றாண்டை சார்ந்ததாகவும் எவ்வித செதுக்கல் வேலைப்பாடுகளின்றி வ...

ஜமுனா ஏரி

Image
நல்லூரிலே சட்டநாதர் ஆலயத்திற்கும் முத்திரைசந்திக்கும் இடையில் பருத்திதுறை வீதியின் கிழக்கு பக்கத்தில் இவ் ஜமுனா ஏரி அமைந்துள்ளது. 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நல்லூரை தலைநகராகக் கொண்டு யாழ்ப்பாண அரசு விளங்கியது. இங்கு கனகசூரியனுக்குப் பின் அரசனாக வந்த அவனது மகன் சிங்கைப் பரராசசேகரன என்பவன் காலத்திலேயே இந்த யமுனா ஏரி கட்டப்பட்டதாகக் கருத்துண்டு. 16ம் நூற்றாண்டிற் போத்துக்கேயர் இலங்கை வந்த போது இங்கு கோட்டை , கண்டி , யாழ்ப்பாணம் எனும் 03 இராசதானிகள் இருந்ததாகவும் அவற்றில் யாழ்ப்பாண மன்னன் பொருள் வளத்திலும் இராணுவ பலத்திலும் மேலோங்கியிருந்ததாகவும் அவர்களது ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வரசு தொடர்பாக பிற்காலத்தில் எழுந்த யாழ்ப்பாண வைபவமாலை , கைலாயமாலை , வையாபாடல் முதலான தமிழ் இலக்கியங்கள் யாழ்ப்பாண அரசர்கள் பற்றியும் அவர்களது சாதனைகள் மக்கள் குடியேற்றங்கள் பற்றியும் பல தகவல்களை தருகின்றன.இவ்விலக்கியங்கள் சிங்கைபரராசசேகரன் என்பவனே சிங்கை என்னும் பெயரை தலைநகருக்குரிய பெயராக பயன்படுத்தினான் என குறிப்பிடப்படுகின்றது. இவன் காலத்தில் தான...

கந்தரோடை

Image
யாழ்ப்பாண மண்ணில் திராவிடர்களின் ஆரம்பகாலக் குடியிருப்புகளில் ஒன்றாகக் கந்தரோடை இனங்காணப்பட்டுள்ளது. இறந்தவர்களைப் பெரும் கற்கள் கொண்டு அடக்கம் செய்த ஒரு காலகட்டம் பெருங்கற்காலம் என்று திராவிடர் வரலாற்றில் அழைக்கப்படுகின்றது. இக்காலம் விஜயன் வருகைக்கு முற்பட்ட காலமாகும். இப்பெருங்கற்காலக் குடியிருப்புகள் யாழ்குடநாட்டில் சுமார் 40 இடங்களிலிருந்ததாகத் தொல்லியல் ஆய்வாளர்களால் இனங்காணப்பட்டுள்ளன. அவற்றில் தலையாய ஒன்றாகக் கந்தரோடை குறிப்பிடப்படுகின்றது. சுமார் 3.2 சதுர கிலோமீற்றர் பிரதேசத்தை உள்ளடக்கிய இப் பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்ட போது தொன்மையான கறுப்புச் சிவப்பு மட்பாண்டங்கள், நாணயங்கள்,எலும்புகள், கட்டட அழிபாடுகள், சிற்பங்கள் , சிலைகள், தமிழ் பிராமிப் பொறிப்புகள், மணி வகைகள், ஆபரணங்கள் முதலானவை கிடைக்கப் பெற்றன. இவை இப்பிரதேசத்தின் தொன்மையை உணர்த்தி நிற்கின்றன. இச் சான்றுகள் இந்தியாவினது அரிக்கமேடு , ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களுடனான தொடர்புகளை உணர்த்துகின்றன. கிரேக்க உரோமப் பொருட்கள் , நாணயங்கள் அந் நாடுகளுடனான நேரடி அல்லது தமிழகம் மூலமான தொடர்பு இருந்ததை உறுதி செய்கின்றன. ...

யாழ்ப்பாணத்தில் அரச மரபு தோண்றி வளர்ந்த வரலாற்றைக் கலைவடிவமாக கூறும் நகுலேஸ்வரர் ஆலயம்

Image
   உலக மரபுரிமைச் சின்னங்களின் வரிசையில் இணைத்துக் கொள்ள இலங்கை கலாசார அமைச்சினால் கருத்தில் கொள்ளப்பட்ட புராதன ஆலயங்களில் ஒன்றாக கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம் காணப்படுகின்றது. இதற்கு இவ்வாலயம் அமைந்த இடத்தின் வரலாறும்  ஆலயத்தின் தோற்றமுமே காரணமாகும். இவ்வாலயமானது பண்டு தொட்டு சர்வதேச கடல்சார் வலையமைப்பில் அரசியல்  வாணிப கலாசார உறவுகளின் மையமாக இருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது. போல் பீரிஸ் என்ற அறிஞர் கி.மு 6 ஆம் நூற்றாண்டு விஜயன் இலங்கை வந்த போது வடக்கில் இருந்த ஆலயங்களில் ஒன்றாக நகுலேஸ்வரத்தைக் குறிப்பிடுகிறார். விஜயன் வருகை இன்று ஒரு கட்டுக்கதையாகப் பார்க்கப்பட்டாலும் அவன் வருகை தொடர்பான காலத்துடன் இவ்வாவலயம் இனணத்துக் கூறப்பட்டிருப்பது ஆலயத்தின் பழமைக்கு ஒரு சான்றாகும். அவற்றை உறுதிப்படுத்தும் சான்றுகள் ஆலயம் அமைந்த பிராந்தியத்திற்கு உண்டு என்பதை நாம் இவ்விடத்தில் முதலில் குறிப்பிடவேண்டியுள்ளது. keeri malai இலங்கை வரலாற்று இலக்கியங்களில் கி.மு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து இலங்கையில் இருந்த 3 துறைமுகங்களை பட்டினம் என அழைக்கின்றனர். அவை முறையே யாழ்ப்பாணம;;...