யாழ்ப்பாணத்து மரபுரிமைச் சின்னங்களின் பாதுகாப்பு
ஒரு சமுதாயத்தின் மரபுரிமைச் சொத்து என்பது அதனுடைய வரலாற்றை உண்மையாக உணரக்கூடிய ஒரு வழிமுறையாகும். பாரம்பரியம் என்பது ஒரு தேசத்தின் கலாசார ஒற்றுமைத் தன்மையின் ஒருங்கிணைந்த ஒரு அம்சமாகும். அதேவேளை தற்காலஇஎதிர்கால சந்ததியினரின் நன்மைக்காக கலாசாரத் தொடர்ச்சியின் தொடர்ச்சிகளை வளர்ப்பதற்கும்,பேணிப்பாதுகாப்பதற்குமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. யாழ்ப்பாணக்குடாநாடானது பல தரப்பட்ட கலாசாரக் கூறுகளையும் பிரதிபலிக்கின்றது.குறிப்பாக பல இனம்;இமதம்.மொழி.பாரம்பரியம் கலந்த வாழ்விடமாகவுள்ளது. cultural heritage பாரம்பரியமான இன மத ஒருமைப்பாட்டின் மையமாகவும் அதேவேளை அவற்றினை இன்றுவரை பேணி வருகின்றது. மேலும் வடகிழக்கு பிரதேசங்களின் பொருளாதார மையமாகவும் திகழ்கின்றது.இங்கு காணப்படுகின்ற தொல்லியல் சின்னங்களின் பராமரிப்பு புனர்நிர்மாணமானது உல்லாசத்துறையினை வளப்படுத்துவதுடன் பொருளாதார வளர்ச்சியினையும் மேம்படுத்துகின்றது. இப்பிரதேசத்தில் செங்கற்கள் மரத்தினாலான பலதரப்பட்ட தொல்லியல் சின்னங்கள் காணப்படுகின்றன. இவ் எச்சங்களைப் பேணிப்பாதுகாப்பதற்கான வழிமுறைகளை பற்றி நோக்குவோம். செங்கட...